சூலூர் அருகே கார்கள் மோதல் ஐயப்ப பக்தர்கள் படுகாயம்
11/22/2019 1:01:12 AM
சூலூர், நவ.22: சூலூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.தெலங்கானா மாநிலம் விசாராபாத் பகுதியைச் சேர்தவர்கள் ரவி(48), அனுமந்தையா(38) இவர்களும் இவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து சபரிமலை செல்வதற்காக நேற்று முன்தினம் காலை தெலங்கானா மாநிலத்தில் இருந்து இரண்டு கார்களில் புறப்பட்டனர். இவர்கள் நேற்று மதியம் சூலூர் பட்டணம் பிரிவு அருகே வரும்போது, எதிரில் வந்த மற்றொரு கார் மோதியது. இதில் ரவி மற்றும் அனுமந்தையா உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களுடன் மற்றொரு காரில் வந்தவர்கள் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அவர்களை மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் செய்திகள்
தி.மு.க. மக்கள் கிராம சபை மூலம் 9 ஆண்டுகால தெருவிளக்கு பிரச்னைக்கு தீர்வு
போலி பேஸ்புக்கில் பணம் பறிக்கும் கும்பல்
சிறுமுகை விருட்ச பீடத்தில் இன்று கும்பாபிஷேக விழா
கோவையில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
கோவையில் தே.மு.தி.க. சார்பில் இன்று பொங்கல் விழா பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்
மலைவாழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்