மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
11/22/2019 12:42:42 AM
வேப்பூர், நவ. 22: வேப்பூர் தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் திட்டக்குடி ரவிச்சந்திரன், விருத்தாசலம் செந்தில்குமார், வேப்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், மாற்று திறனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, இலவச கறவை மாடுகள் உட்பட பல கோரிக்கைகளை மனுக்களாக மாற்றுத்திறனாளிகள் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்தார்.
முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் சுந்தரவடிவேலு, சையத் சர்தார், வேப்பூர் துணை வட்டாட்சியர் பாலமுருகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் வேப்பூர் பழனி, சிறுபாக்கம் குமார், விஏஓக்கள் ராஜாமணி, அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து ஒருதலை காதலால் ஆசிரியர் வெறிச்செயல்
என்கவுண்டரில் இறந்த வாலிபர் உடல் 11 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
புதுச்சேரி அருகே பயங்கரம் வயலுக்கு சென்ற தாய், மகள் படுகொலை சொத்து தகராறு காரணமா? போலீசார் விசாரணை
கஞ்சா விற்ற ருவாண்டா நாட்டை சேர்ந்த முன்னாள் பல்கலைக்கழக மாணவர் கைது
கேன் வாட்டர் தட்டுப்பாடு ஆலையை முற்றுகையிட்ட முகவர்கள்
வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்