திருட்டு காரில் வந்து விபத்து ஏற்படுத்திய வாலிபர் சுற்றி வளைப்பு
11/20/2019 7:28:07 AM
ஆரல்வாய்மொழி, நவ.20: ஆரல்வாய்மொழியில், குற்றாலத்தில் காரை திருடி விட்டு வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரை ரோந்து போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி சிவன்கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் கணேசமூர்த்தி(28). இவர் தென்காசியில் டிராவல்ஸ் நடத்தி வரும் சாந்தினி என்பவருக்கு சொந்தமான சொகுசுகார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி கீழ அலங்கார தட்டு பகுதியை சேர்ந்த ஜெயமாரி என்பவர் மகன் ஜூலியன், இந்த டிராவல்சில் இருந்து சொகுசு காரை வாடகைக்கு எடுத்தார். இக்காரை கணேசமூர்த்தி ஓட்டினார். நேற்று காலை குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள காட்டேஜ் காம்பவுண்டுக்குள் காரை நிறுத்தி விட்டு, டிரைவர் கணேசமூர்த்தி பாத்ரூமுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது காரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் காரையும் காரில் இருந்தவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கார் திருடப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த அவர் டிராவல்ஸ் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார். பின்னர் இது பற்றி குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் பற்றி அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இத்தகவல் ஆரல்வாய்மொழி சோதனை சாவடி மற்றும் ரோந்து போலீசாருக்கும் கிடைத்தது. இந்நிலையில் காவல்கிணறு - நாகர்கோவில் நெடுஞ்சாலையில் சோதனை சாவடிக்கு முன்பாக அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும், ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்த சூர்யா நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காவல்கிணற்றில் இருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் சத்தம் போடவும், சிலர் இரு சக்கர வாகனத்தில் காரினை துரத்தினர். ஆனால் அந்த கார் சோதனை சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றது. உடனே சோதனை சாவடி போலீசார் ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உஷார் நிலையில் இருந்த ரோந்து போலீசார் தப்பிச்செல்ல முயன்ற காரை சுற்றி வளைத்து ஓட்டுனரை பிடித்தனர். அப்போது அவர் அதிக போதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் அக்கார் குற்றாலத்தில் காணாமல் போன கார் என தெரிய வந்தது. உடனே காரையும் அவரையும் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் காரை ஓட்டி வந்தவர் ஜூலியன் என தெரிய வந்தது.மேலும் அவருக்கு வேறு கார் திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
குமரியில் 4 இடங்களில் முகாம் தொடங்கியது கொரோனா தடுப்பூசி போட சுகாதார பணியாளர்கள் தயக்கம் பதிவு செய்த 400 பேரில் 55 பேர் மட்டுமே முன்வந்தனர்
2ம் தவணை தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும்
குமரியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் கனிமொழி எம்.பி நாளை குமரி வருகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
கடற்கரை பகுதிகளில் தடை குமரியில் களை இழந்த காணும் ெபாங்கல் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் பார்வையாளர் ஆய்வு
இரணியல் அருகே அடுத்தடுத்து ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்