கிணற்றில் பெண் சடலம் மீட்பு
11/20/2019 12:53:34 AM
கோவை, நவ.20: கோவை அருகே பெண் ஒருவர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கோவை அன்னூர் அடுத்த நல்லிசெட்டிபாளையம் அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் வெளியங்கிரி. இவருக்கு அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாய கிணறு உள்ளது. இந்நிலையில் நேற்று கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தேர்த்திருவிழா
ரூ.50.35 கோடியில் மேற்கு புறவழிச்சாலை இரு வழிப்பாதையாகிறது
மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடத்த கோரிக்கை
தைப்பூசத்தையொட்டி பழனிக்கு சிறப்பு பஸ்
திமுக சார்பில் இலவச மரக்கன்று வினியோகம்
திமுக சார்பில் இலவச மரக்கன்று வினியோகம்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்