இந்திராகாந்தி பிறந்தநாள் விழா
11/20/2019 12:52:10 AM
ஈரோடு, நவ. 20: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ரவி இந்திராகாந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மண்டல தலைவர்கள் அய்யூப்அலி, திருச்செல்வம், விவேகானந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் ராஜேஸ்ராஜப்பா, செல்லகுமாரசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், கனகராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாட்சா, துணை பொதுச் செயலாளர் முகமதுஅர்சத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மணல்மேட்டில் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதில் வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் ரவி, சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் வினோத்குமார், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட கலைபிரிவு தலைவர் ஜாபர்சாதிக், மாவட்ட செயலாளர் பூவை ராஜன், இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் வேம்பரசன், பிரபு, சந்துரு, விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர். இைதத்தொடர்ந்து, சென்னிமலையில் பாரதியார் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
8 சட்டமன்ற தொகுதிகளில் மாவட்டத்தில் 19.57 லட்சம் வாக்காளர்கள்
629 முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி
மாவட்டத்தில் 6 அரசு பள்ளிகள் தரம் உயர்வு
ஈரோடு மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட 13 பைக்குகள் இன்று ஏலம்
கன்னட அமைப்பினர் சேதப்படுத்திய பெயர் பலகைகள் தமிழக எல்லைக்குள் நடும் பணி தீவிரம்
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக குடியரசு தினத்தில் ஈரோட்டில் விவசாயிகள் வாகன பேரணி
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்