SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறைதீர் கூட்டத்தில் கிராமமக்கள் மனு மேலவாளாடியில் ரயில்வே கேட்டை மூடியதால்

11/19/2019 8:07:40 AM

திருச்சி, நவ.19: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அப்பாத்துறை பஞ்சாயத்துக்கு உட்பட்டது மேலவாளாடி கிராமம். இந்த கிராமத்திற்கு அடுத்தார்போல் புதுக்குடி என்ற செம்பழனி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் உள்ளது.
 இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால் ரயில்வே டிராக்கை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் விளைநிலங்கள் அதிகம் நிறைந்த இப்பகுதியில் ரயில்வே நிர்வாகம் குகை வழிப்பாதை அமைக்கப்போவதாக அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 30 அடி ஆழத்தில் நீரோட்டம் நிறைந்த இப்பகுதியில் குகை வழிப்பாதை அமைத்தால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் எனக்கருதி இந்த குகை வழிப்பாதைக்கு இக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி ரயில்வே நிர்வாகம் குகை வழிப்பாதையை அமைத்தே தீருவோம் என்று விடாப்பிடியாக உள்ளது. குகை வழிப்பாதை அமைக்க கூடாது என்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் கடந்த சில வாரங்களுக்கு முன் இவ்வழியில் உள்ள ரயில்வே கேட்டை அடைத்து, இருபுறங்களிலும் பொதுமக்கள் செல்லாதபடி 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பை உணராமல் ரயில்வே டிராக்கை கடந்து சென்று வருகின்றனர். தற்போது இருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால், சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகம் சென்று வருகின்றன. எனவே காலை மாலை வேளைகளில் பள்ளி சென்று வரும் பொதுமக்கள் இரு திசைகளில் இருந்து வரும் ரயில்கள் வருவதை கவனிக்காமல் கேட்டில் குனிந்து சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே கோட்ட மேலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர் கேட்டை திறக்க மறுத்து வருகிறார். இதுகுறித்து நீங்கள் பிரதமர் மோடியைதான் சந்திக்க வேண்டும் என சர்வசாதாரணமாக கூறி பொதுமக்களை அலட்சியப்படுத்துகிறார். பொதுமக்களும் கலெக்டர், டிஆர்எம், ஆர்டிஓ, தாசில்தார் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயிர்பலி ஏற்படும் முன் பொதுமக்கள் நலன் கருதி பூட்டப்பட்டிருக்கும் ரெயில்வே கேட்டை திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்