SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டுதுறையில் சிறந்து விளங்கும் 100 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் இலவச சேர்க்கை

11/19/2019 8:07:18 AM

தொட்டியம், நவ.19: விளையாட்டுதுறையில் சிறந்து விளங்கும் 100 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் இலவசமாக சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 62வது குடியரசு தின தடகள போட்டிகள் நேற்று துவங்கியது. மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டி துவக்க விழாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை வகித்தார். அமைச்சர் வளர்மதி சிறப்புரையாற்றினார். திருச்சி கலெக்டர் சிவராசு, முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், முன்னாள் எம்பி ரத்தினவேல், கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் தடகள போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வருகிற 23ம் தேதி வரை 6 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இதில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து 32 மாவட்டங்கள், விளையாட்டு விடுதி என 33 அணிகளில் இருந்து ஒவ்வொரு போட்டிக்கும் இரண்டு வீரர்கள் வீதம் மொத்தம் ஒரு போட்டிக்கு 66 பேர் கலந்து கொள்கின்றனர். இதில் மொத்தமாக 2,099 மாணவிகள், 2,236 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை (20ம் தேதி) வரை மாணவியர்களுக்கும், 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மாணவர்களுக்கும் தடகளப் போட்டிகள் நடைபெறுகிறது.

விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: எல்லா துறைகளிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகிறது. 2005ம் ஆண்டு விளையாட்டு துறைக்கு தனி பல்கலைக்கழகத்தை தமிழ்நாட்டில் ஜெயலலிதா உருவாக்கினார். விளையாட்டு துறையில் சிறப்பாக பங்களிக்கும் 100 மாணவ, மாணவிகளை கல்லூரிகளில் இலவசமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து உயர்நிலை பள்ளிகளிலும், 10 கணினிகளும், மேல்நிலைப்பளிகளில் 20 கணினிகளும் இன்னும் ஒரு மாதத்தில் அமைக்கப்படும். ஜனவரி மாத இறுதிக்குள் 92 ஆயிரம் ஸ்மாரட் போர்டு, 7500 ஸ்மாரர்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றார். துவக்க விழாவில் பள்ளி மாணவிகளால் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. போட்டிக்கான ஏற்பாட்டினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்