SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கை உர உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும்

11/19/2019 7:24:19 AM

நாகை,நவ.19: மனித மலத்தை இயற்கை உரமாக பயன்படுத்தலாம் என்று பண்டித ஜவர்லால் நேரு வேளாண் கல்லூரி பேராசிரியர் ஆனந்த்குமார் கூறினார். புதுச்சேரி பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியில் தோட்டக்கலைத் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் 19 மாணவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் கிராமத்தில் கடந்த 7ம் தேதி முதல் கிராமிய அனுபவ களப்பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கத்திரிப்புலம் கிராமத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இணைப் பேராசிரியர் ஆனந்த்குமார் தலைமை வகித்தார். மனித மலத்தை எருவாக பயன்படுத்துவது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ஒரு மனிதனுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்ய போதுமான எருவை மலமாக இயற்கை மனிதனுக்கு உதவி உள்ளது. அதை முறையாக பயன்படுத்துவதற்கு மாறாக ரசாயன உரங்களைப் உபயோகிப்பதால் பல பக்க விளைவுகள் மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் மாசு ஏற்படுத்தி பாதிப்புகளை உண்டாகி வருகின்றன. மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப் புழுக்கையை நாம் விமரிசையான எருவாக பயன்படுத்தி பயிர்களைச் சாகுபடி செய்து பயன் அடைகிறோம்.

தாவரங்களின் சத்துக்குறைந்த பகுதிகளான வைக்கோல், புண்ணாக்கு போன்றவற்றை உண்ட கால்நடைகள் இடும் சாணம் குறைந்த சத்து உடையதாகவே இருக்கும் என்பது எதார்த்தமானது. மாற்றாக பயிர்களின் சத்து நிறைந்தப் பகுதிகளான காய், கறி, கனி மற்றும் பல்வேறு ஊட்டம் நிறைந்த பால், நெய் போன்ற உணவை உண்ணும் மனிதர்களின் மலமானது பயிர்களுக்கு மகத்தான ஊட்டச் சத்து என்பது நிதர்சனமான உண்மை.தவறான கண்ணோட்டம் மற்றும் மனநிலைக் காரணமாக ஊட்டம் நிறைந்த நமது எருவை துர்நாற்றம் என்று உதாசீனம் செய்பவர்கள் அதற்கு அவர்கள் தான் காரணம் என்று உணர்ந்து விவசாயப் பயன்பாட்டிற்கு பங்களிப்பாகக் கொடுக்க முன்வர வேண்டும். வீடுகளில் அதற்கேற்பப் பசுமைக் கழிவறைகளுக்கானக் கட்டுமானங்களை உருவாக்க உதவ வேண்டும். மக்கள் தொகையில் உலகளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நம் நாட்டின் மனித வளத்தை உரிய வழியில் இயக்கி , மக்கள் எருத் தயாரிப்பில் முதலிடம் எட்டினால் , விவசாயத்திற்குத் தேவையான இயற்கை உர உற்பத்தி மற்றும் மேலாண்மையில் தன்னிறைவும் சுய சார்பும் அடைந்த நாடாக மாறுவதோடு ஊற்றம் ஏற்றிய உணவு உற்பத்தியில் சிகரம்
அடையலாம். நகர்ப்புற மக்களுக்கு பெரும் வாய்ப்பும் பொறுப்பும் உள்ளது. அவரவர் கழிவுகளை வீட்டிற்குள்ளேயே பல வருடங்கள் வைத்துக்கொள்ளாமல், அதை உரமாக்கி அவ்வப்போது விவசாயத்திற்காக கிராமங்களுக்கு அனுப்புவது சுகாதாரமான நற்செயல் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்