SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுகாதார பணியாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு பயிற்சி

11/19/2019 7:11:07 AM

இளம்பிள்ளை, நவ.19:இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சியில், சுகாதார பணியாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது. இடங்கணசாலை,  இளம்பிள்ளை பேரூராட்சியில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள்,  பரப்புரையாளர்கள், சுய உதவி குழுக்கள் ஆகியோருக்கு தூய்மை இந்தியா இயக்கம்  சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து 4ம் கட்ட பயிற்சி முகாம் கஞ்சமலை  சித்தர் கோவில் அடிவாரத்தில் உள்ள இடங்கணசாலை பேரூராட்சி சமுதாய கூடத்தில்  நேற்று நடந்தது. பயிற்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர்கள் மேகநாதன்  (இடங்கணசாலை), தாமோதரன் (இளம்பிள்ளை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பயிற்சியில் வீரத்தமிழன், மேற்பார்வையாளர் மோகனா ஆகியோர் கலந்து கொண்டு  பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகள் விழுப்புரம் ரிவார்ட் சொசைட்டி  சார்பில் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RamMandirBhoomiPoojan05

    ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

  • ayothikkk1

    மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

  • italy_96611

    வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

  • umilneer11

    உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

  • 25-07-2020

    25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்