SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தற்கொலைக்கு தூண்டிய வழக்கு புதுவை ஆசிரம நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

11/19/2019 7:03:12 AM

புதுச்சேரி,  நவ. 19:  ஆசிரமத்தில் தங்கியிருந்த சகோதரிகளை தற்கொலைக்கு தூண்டிய  வழக்கில் ஆசிரம நிர்வாகிகளுக்கு புதுச்சேரி நீதிமன்றம் நிபந்தனையுடன்  ஜாமீன் வழங்கியுள்ளது.  புதுவை ஆசிரமத்தில் தங்கியிருந்த ஹேமலதா  நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் குடும்பத்தினருடன்  அவர் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து ஹேமலதாவின் பெற்றோர் உள்பட 5 பேர்  காலாப்பட்டு கடற்கரைக்கு சென்று கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.  இதில் பெற்றோர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஹேமலதா மற்றொரு சகோதரி  மீட்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக  காலாப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.  இதனிடையே தங்களது  குடும்பத்தை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குபதிவு  செய்யக்கோரி பெரியகடை காவல் நிலையத்தில் ஹேமலதா தரப்பில் புகார்கள்  அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக புதுச்சேரி வந்த  தேசிய மனித உரிமை ஆணையத்திடம் ஹேமலதா முறை
யிடவே, அவர்களின்  அறிவுறுத்தலின்பேரில் மீண்டும் காவல் நிலையம் சென்று அவர் புகார்  அளித்தார்.

  இருப்பினும் அதை காவல்துறை ஏற்க மறுத்த நிலையில்  இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆசிரம சகோதரிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.  அதை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக சீனியர் எஸ்பி தலைமையிலான கமிட்டி  விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. ஆனால் இதுதொடர்பான  பேச்சுவார்த்தைக்கு ஆசிரம நிர்வாகிகள் வராத நிலையில், அவர்கள் சென்னை  ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில் தற்போது திடீரென  தங்களது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்ற ஆசிரம நிர்வாகிகள் தரப்பினர்,  காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை தங்கள் மீது பாயலாம் என்பதை கருத்தில்  கொண்டு முன்ஜாமீன் பெறும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கினர். இதற்காக  புதுச்சேரி நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்  கொண்ட புதுச்சேரி நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டிருந்த அறங்காவலர்கள்  மனோஜ் தாஸ் குப்தா, திலிப்குமார் தத்தா, திலிப் மெஹ்தானி, பிரபாகர்  ரூபனகுந்தா என்ற பட்டி உள்ளிட்ட 5 பேருக்கும் நேற்று நிபந்தனை ஜாமீன்  வழங்கி உத்தரவிட்டது.
 அதன்படி ரூ.1 லட்சம் ஜாமீன் பத்திரம் (தலா 2  நபர்) நிறைவேற்றவும், இவ்வழக்கில் தீர்ப்பு வரும்வரை ஏனாம் நீதிமன்றத்தில்  அவர்கள் தினமும் ஆஜராகி ைகயெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. இதனிடையே ஆசிரம நிர்வாகத்தை உடனடியாக கையகப்படுத்த  வேண்டுமென மாநில முதல்வரை பாதிக்கப்பட்ட ஆசிரம சகோதரியில் ஒருவரான ஹேமலதா  வலியுறுத்தி உள்ளார். மேலும் ஆசிரமத்தின் இருண்ட விவகாரங்களில் வெளிப்படை  தன்மையை கொண்டுவர வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்