SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காளையார்கோவில் பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் உடனே அகற்றப்படுமா?

11/19/2019 6:34:10 AM

காளையார்கோவில், நவ.19:  காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள நிழற்கூடத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள் பயணிகள் மீது விழும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் மதுரை, தொண்டி, காரைக்குடி, பரமக்குடி பேருந்துகள் நிற்கும் இடத்தில் உள்ள நிழற்கூடத்தின் மேல் பகுதியில் பல்வேறு வர்த்தகர்கள் விளம்பர போர்டுகள் வைப்பதற்கு இரும்பு ஆங்கில் அமைத்து அவற்றில் விளம்பரப் பலகைகளை கட்டிவைத்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன் வைக்கப்பட்ட விளம்பரப் போர்டுகள் கிழிந்து தொங்கிக் கெண்டு உள்ளது. மேலும் இரும்பு கம்பிகளும் துருப்பிடித்து உடைந்த நிலையில் உள்ளது. தற்போது பேனர்களால் ஏற்படும் விபத்தில் உயிர்சேதம் நடந்து வரும் நிலையில் காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் இதுபோன்ற பேனர்கள் இருப்பது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 மேலும் காளையார்கோவில் பேருந்துநிலையம் இடநெருக்கடியில் உள்ளதாலும் தற்போது கிராமப்புறங்களில் திருவிழா மற்றும் திருமண விஷேசகாலங்கள் நடைபெறும் காலம் என்பதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. பயணிகள் நிற்பதற்கு ஒரே ஒரு சிறிய கட்டிடம் தான் உள்ளது. காளையார்கோவில் மக்கள் தொகை ஏற்றவாறு பஸ்நிலையம் இல்லாததால் எப்பொழுதும் கூட்டமாக காணப்படும்.  தற்போது சில நேரங்களில் காற்று பலமாக  அடிப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும்  விளம்பர போர்டு மற்றும் இரும்பு கம்பிகள் பயணிகள் மீது  விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட விளம்பரதாரர்கள் புதுப்பிக்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும். அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்