SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும்

11/19/2019 12:07:08 AM

சென்னை, நவ.19: தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும், என  மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு, திமுக எம்பி டி.ஆர்.பாலு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:தாம்பரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை, என்.எச்.45 நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் முடிவு பெறுகிறது. இதனால், சாலையை கடக்கவும், மேற்கு தாம்பரம் செல்வதற்கும் பயனற்றதாக இருக்கிறது என தாம்பரம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ரயில்வே சுரங்கப்பாதையை என்.எச் 45 நெடுஞ்சாலையின் குறுக்கே நீட்டித்து தர வேண்டும்.

மேலும் சுரங்கப்பாதையை பயன்படுத்தும் கிழக்கு தாம்பரம் மக்கள் என்.எச் 45 சாலையின் மேற்கு பகுதியை அடையுமாறு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரயில்வே சுரங்கப்பாதை கிழக்கு தாம்பரம் பகுதியில் இருந்து மேற்கு தாம்பரம் பகுதிக்கு நீட்டிக்கப்பட்டால், சாலை விபத்துக்கள் பெருமளவில் குறைந்துவிடும். தற்போதுள்ள ரயில்வே சுரங்கப்பாைதையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-12-2020

    04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்