தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு
11/14/2019 6:21:40 AM
ஆம்பூர், நவ.14: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க ஆம்பூர் நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை தலைமை ஆசிரியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பாக கடந்த 1993ம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, வேலூர் மாவட்டம், கேவி குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு நாள் மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 126 பள்ளி மாணவ, மாணவிகள் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.
இதில் ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகள் ரம்யா, சண்முகபிரியா ஆகியோரின் பல்வேறு வகை மண்ணில் உள்ள ஊட்டசத்துக்களை மதிப்பீடு செய்தல் என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் சத்தியகுமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.
மேலும் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 12.64 லட்சம் பேர்: ஆண்களை விட பெண்களே அதிகம்
வேலூர் 1வது மண்டலத்தில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வீணாகும் அவலம்: அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை
தென்னையை பாதிக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்
கால்நடை வளர்ப்போருக்கு தீவனப்பயிர் விதைகள் கால்நடை மற்றும் வேளாண்துறை வினியோகம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில்
கூடுதலாக 3 இடங்களில் மினி கிளினிக் வேலூர் மாநகராட்சியில்
வாடகை, வரி செலுத்தாத 1,000 பேருக்கு நோட்டீஸ் சீல் வைப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை வேலூர் மாநகராட்சியில்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!