அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்
11/14/2019 6:11:14 AM
திருவண்ணாமலை, நவ.14: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் மேற்கொண்டனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடவேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள நாலரை லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேன் மூலம் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்த வேன் பிரசாரம் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது. ஆரணியில் நேற்று காலை தொடங்கிய இந்த பிரசார இயக்கம் சேத்துப்பட்டு, போளூர், கலசபாக்கம் வழியாக திருவண்ணாமலை வந்தனர். அங்கு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், காந்தி சிலை ஆகிய இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ஜோதி சங்கர் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் மு.பாஸ்கரன், மாநில துணைத்தலைவர்கள் ஏ.பெரியசாமி, கோ.பழனியம்மாள் உட்பட பலர் பேசினர்.ஆரணி: ஆரணி தாலுகா அலுவலகம் முன் நேற்று, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்டக்கிளை தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் ஜோதி சங்கர், செயலாளர் பிரபு முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் பரசுராமன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கல்வி நிர்வாக அலுவலக சங்க மாநில தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டக்கிளை பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.இதேபோல், சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன் நேற்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது. இதில் வட்டத்தலைவர் பாபு, செயலாளர் முத்துவேலன், பொருளாளர் பாபு, தாசில்தார் ஹரிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை வட்டார மருத்துவ அலுவலர் அட்வைஸ்
தேர்தல் கட்டுப்பாட்டால் குறைதீர்வு கூட்டம் ரத்து வீட்டுமனையை மீட்டுத்தரக்கோரி குடும்பத்துடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆர்டிஓ தலைமையில் நடந்தது
இளம்பெண் தற்கொலை
திருவண்ணாமலையில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு
ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை சுகாதார இணை இயக்குனர் ஆய்வு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்