நிர்வாகப் பிரச்னைகளால் காவலர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு: எஸ்பி தகவல்
11/14/2019 12:29:16 AM
காஞ்சிபுரம். நவ.14: நிர்வாகப் பிரச்னைகளால் காவலர் தகுதித்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி முதல் நடைபெறும் என எஸ்பி கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழக காவல்துறையில் 2019ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு துறைக்கான உடற்திறன் தேர்வு நடைபெற்று வந்தது. இந்த வேளையில், நிர்வாக பிரச்னையின் காரணமாக தற்காலிகமாக உடற்தகுதி தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.முதற்கட்ட உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்த தேர்வுகள் வரும்18ம் தேதி முதல் காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரியில் மீண்டும் நடைபெறும்.
கடந்த 9ம் தேதி தேர்வுக்கு அழைக்கப்பட்ட ஆண் விண்ணப்பதாரர்களுக்கு வரும்18ம் தேதி காலை 6 மணிக்கும், 11ம் தேதி அழைக்கப்பட்ட பெண்களுக்கு 19ம் தேதி காலை 6 மணிக்கும், 11ம் தேதி தேர்வுக்கு அழைக்கப்பட்ட ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 19ம் தேதி காலை 8 மணிக்கும் இந்த தேர்வுகள் நடைபெறும்.அழைப்பு கடிதம் உள்ள விண்ணப்பதாரர்கள், மாற்றம் செய்யப்பட்ட தேதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திருப்போரூர் நூலகம் எதிரே தேங்கி நிற்கும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்
திருக்கழுக்குன்றம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: 4 பேருக்கு வலை
பெண்கள் பயணிக்க கூடுதல் பெட்டி அமைக்க காஞ்சிபுரம் எம்எல்ஏ கோரிக்கை மனு
மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் நிறைவடையாமலே விளையாட்டு மைதான பணி முடிந்ததாக கல்வெட்டு: அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு
தேசிய வாக்காளர் தின போட்டியில் அரசினர் சிற்ப கல்லூரி மாணவர் முதலிடம்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!