கழிவுநீர் கலந்து வருகிறது குடிநீர்
11/13/2019 7:08:24 AM
திண்டுக்கல், நவ. 13: குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் எனவும், சுகாதாரமான குடிநீர் வழங்கவும் கோரி நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழியிடம் பொதுமக்கள் முறையிட்டனர். நிலக்கோட்டை அருகே முசுவனூத்து ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிபட்டி, கல்கோட்டை கிராமங்களுக்கு எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.7 லட்சம் மதிப்பில் நாடக மேடை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பூமிபூஜை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. எம்எல்ஏ தேன்மொழி தலைமை வகிக்க, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார். இரு கிராமங்களிலும் பூமி பூஜை விழா நடந்தது. கல்கோட்டையில் நடந்த பூமி பூஜையில் கலந்து கொண்ட பொதுமக்கள் எம்எல்ஏவிடம், எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் 100 நாள் வேலையை குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வழங்காமல் அங்குமிங்குமாக அலைய விடுகின்றனர். எனவே 100 நாள் வேலையை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு எம்எல்ஏ, கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் செய்திகள்
பட்டிவீரன்பட்டி அருகே மக்கள் கிராம சபை
கால்நடைகளுக்கு அளவான பொங்கல் கொடுத்தால் அமில நோயிலிருந்து பாதுகாக்கலாம்
கொடுத்த புகாருக்கு 4 நாளாகியும் நடவடிக்கை இல்லை அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
கொத்தப்புள்ளி பூவோடையில் மழைநீரில் மூழ்கிய ரயில்வே சுரங்க பாதை எம்பி ஆய்வு
பொங்கல் பரிசு வழங்க கோரி ஆட்டோ தொழிலாளர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்
பழநி தைப்பூச திருவிழாவிற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்