திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் 2வது நாளாக கிரிவலம்
11/13/2019 6:39:22 AM
திருவண்ணாமலை, நவ.13: திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் நேற்று 2ம் நாளாக கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்தமாத (ஐப்பசி) பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தொடங்கி நேற்று இரவு 7.40 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமி தொடங்கிய நேரத்திலிருந்து பக்தர்கள் கிரிவலம் வர ஆரம்பித்தனர். அதன்பின்னர் படிபடியாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு 9 மணியளவில் கிரிவல பாதை முழுவதும் பக்தர்களே காணப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
பவுர்ணமி நேற்று இரவு நிறைவடைந்ததையொட்டி, திருவண்ணாமலையில் 2வது நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பவுர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் கட்டண தரிசனம், பொது தரிசனம் வரிசையில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை வழிபட்டனர். வழக்கம் போல கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது.
பக்தர்களின் வசதிக்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல வேலூர், விழுப்புரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. எஸ்பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடையால் பொதுமக்கள் ஏமாற்றம்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை 47 பேர் கைது
காணும் பொங்கலையொட்டி சோழவரம் கிராமத்தில் மாடுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்புவதில் மாதம்தோறும் ₹20 லட்சம் முறைகேடு தொழிற்சங்கத்தினர் பகீர் குற்றச்சாட்டு வேலூர் போக்குவரத்து மண்டலத்தில்
பாமக முன்னாள் நிர்வாகி குண்டாசில் கைது கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி
போலி டாக்டர் 10 ஆண்டுகளாக நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்' நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது அம்பலம் ஒடுகத்தூரில் அதிகாரிகள் அதிரடி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்