தனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது
11/13/2019 12:02:46 AM
துரைப்பாக்கம்: சென்னை காரப்பாக்கம், ராஜீவ் காந்தி சாலையில் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக ஆந்திரா மாநிலம், நெல்லூர், குண்டுபள்ளி கிராமத்தை சேர்ந்த பிரசாத் (25) என்ற வாலிபர் சமையல் வேலைக்காக சேர்ந்துள்ளார்.இந்நிலையில் நேற்று விடுதியில் உள்ள குளியலறையில் இளம்பெண்கள் குளித்துக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த பிரசாத் மறைந்து இருந்து தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனை மற்ற பெண்கள் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்து பிரசாத்தை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை துரைப்பாக்கம் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
பேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
கோயில் பூசாரி தற்கொலை
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்
திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்