அயோத்தியாப்பட்டணத்தில் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு
11/12/2019 7:06:58 AM
அயோத்தியாப்பட்டணம், நவ.12: அயோத்தியாப்பட்டணத்தில். ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து அரூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில், தடுப்பு கம்பி நேற்று மாலை திடீரென பழுதடைந்தது. இதையடுத்து, அதனை தனியாக கழற்றி சரிசெய்யும் பணி நடைபெற்றது. இதனால், சேலத்தில் இருந்து விருதாசலம் செல்லும் பயணிகள் ரயில் அப்பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டது. மேலும், அந்த வழியாக வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தர்மபுரி மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலானோர், இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், எப்போதும் போக்குவரத்து காணப்படும். ரயில் போக்குவரத்திற்காக அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது. மேலும், தடுப்பு கம்பி வலுவிழந்து அடிக்கடி பழுதடைந்து உடைந்து விழுகிறது. இதனால், வாகனங்களில் செல்வோர் நீண்ட நேரம் காத்து கிடக்கும் அவல நிலை உள்ளது. மேலும், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. எனவே, அடிக்கடி பழுதாகும் ரயில்வே கேட் தடுப்பு கம்பியை மாற்ற வேண்டும். மேலும், சீரான போக்குவரத்துக்கு வசதியாக மேம்பாலம் கட்ட வேண்டும்,’ என்றனர்.
மேலும் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் 4 நாளில் 3,016 பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
25,000 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
அறிவிக்கப்படாத மின்வெட்டு
ஏகாபுரத்தில் எருதாட்ட விழா 25 காளைகள் பங்கேற்பு
வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்
காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச விழா தேருக்கு சாரம் கட்டும் பணி மும்முரம்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!