மாநகர், மாவட்ட புதிய நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி
11/12/2019 7:06:48 AM
சேலம், நவ.12: சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் பல்வேறு பிரிவுகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் சேலம் வந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சேலம் மாநகர அதிமுகவுக்கு பல்வேறு பிரிவுகளுக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளனர். அதன்படி, சேலம் அம்மாப்பேட்டை பகுதி 2ல், 44வது வட்ட செயலாளராக பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல அம்மாப்பேட்டை பகுதி செயலாளராக ஜெகதீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி செயலாளர் ஜானகிராமன், அம்மாப்பேட்டை பகுதி எம்ஜிஆர் பகுதி செயலாளர் உமாபதி, அம்மாப்பேட்டை ஜெ.பேரவை பகுதி துணைத்தலைவர் திருநாகரன், எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி இணை செயலாளர் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் கலையரசன், எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி பொருளாளர் செந்தில், எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி இணை செயலாளர் வெங்கடேஸ்வரன், எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி துணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சூரமங்கலம் பகுதி செயலாளராக தியாகராஜன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சூரமங்கலம் பகுதி 1 எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் சக்தி, பகுதி செயலாளர் மோகன், இணை செயலாளர்கள் மாதேஸ்வரன், அழகரசன், மனோ, துணை செயலாளர்கள் வேதபிரகாஷ், சண்முகம், பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்களை நிர்வாகிகளாக நியமித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மக்கள் கிராம சபையில் தீர்மானம்
புகையில்லாத போகி கொண்டாட ஆணையாளர் வேண்டுகோள்
வாகன திருடர்கள் 2 பேர் கைது
திமுக செயற்குழு கூட்டம்; மூர்த்தி எம்எல்ஏ அறிக்கை
அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் போதையில் மயங்கி கிடந்த மூதாட்டி வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்
பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!
13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்