சோமனூர்-கருமத்தம்பட்டி பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் மேலும் 3 பேர் கைது
11/12/2019 6:47:01 AM
சோமனூர், நவ. 12: சோமனூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் வாகன திருட்டு, வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை கருமத்தம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். கருமத்தம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் கணியூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் மதுரை, திருமங்கலம் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிகண்டன், வீரணன், வினோத் குமார் என்பதும், அவர்கள் ேசாமனூர், கருமத்தம்பட்டி பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்து. இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூட்டாளிகளான திருப்பூரை சேர்ந்த தங்கவேல் (36), மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42), சண்முகபாண்டி (38) உள்ளிட்ட மேலும் மூன்று பேரை நேற்று கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதில் தங்கவேல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் டாஸ்மாக் சூப்பர்வைசர் ஒருவரை தாக்கி ரூ4.25 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது. இவர்கள் ஆறு பேரும் சோமனூர், கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு, திருட்டு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருடிய வந்ததுள்ளனர். இதை தொடர்ந்து தங்கவேல், சண்முகபாண்டி, பாஸ்கர் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து, சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
மது விற்றவர் கைது
வெங்கடேசப்பெருமாள் கோயில் தேர்த்திருவிழா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு
குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி மண்டல அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம்
ஓய்வூதியம் கேட்டு தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!