போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி
11/12/2019 6:43:35 AM
ஈரோடு, நவ. 12: போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நேற்று மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சத்தியமங்கலம் தாலுகா சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சிக்கரசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 160 பள்ளி குழந்தைகள் படித்து வருகிறார்கள். ஆனால், இங்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பாசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.
கடந்தாண்டு இந்த பள்ளியில் 120 குழந்தைகள் இருந்தனர்.
ஆனால், இந்தாண்டு பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 30 குழந்தைகளுக்கு 2 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். அதன்படி, இந்த பள்ளிக்கு 5 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், தலைமை ஆசிரியர் தவிர ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருக்கிறார். போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளி குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. இதுதொடர்பாக, பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிக்கரசம்பாளையம் தொடக்கப்பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.
மேலும் செய்திகள்
வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
கடந்த 3 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிராக 1,600 வழக்குகள் பதிவு
பல்வேறு வகையில் பிரசாரம் செய்தாலும் சட்டமன்ற உறுப்பினராக கூட கமல்ஹாசன் ஆக முடியாது
இடத்தை சமன் செய்ய வலியுறுத்தி 2வது நாளாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
பெருந்துறை தொகுதியில் ரூ.2.90 கோடியில் திட்டப்பணிகள்
ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்