முதலாம் உலகப்போர் 101வது நினைவு தினம் புதுச்சேரி போர்வீரர் நினைவு சின்னத்தில் கலெக்டர், பிரெஞ்சு துணைதூதர் அஞ்சலி
11/12/2019 6:14:13 AM
புதுச்சேரி, நவ. 12: முதலாம் உலகப்போரின் 101வது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர்வீரர் நினைவு சின்னத்தில் மாவட்ட கலெக்டர் அருண், பிரெஞ்சு துணைதூதர் கேத்ரின் ஸ்வார்ட் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல் உலகப்போர் 1914 முதல் 1918 வரை நடந்தது. இதில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகியவை ஓரணியாகவும், மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் எதிரணியாகவும் போரிட்டன. போரில் பிரான்ஸ் காலனி பகுதிகளாக இருந்த புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.
முதலாம் உலகப் போர் 1918 நவம்பர் 11ம்தேதி முடிவுக்கு வந்து, போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு 101 ஆண்டுகள் நினைவு தினம் புதுச்சேரியில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண், பிரெஞ்சு துணை தூதர் கேத்ரின் ஸ்வாட் ஆகியோர் மலர்வளையம் வைத்து உலகப்போரில் இறந்த இந்திய மற்றும் பிரெஞ்சு வீரர்களுக்கு மவுன அஞ்சலி
செலுத்தினர்.மேலும் இருநாட்டு தேசிய கொடிகளும் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் பிரெஞ்சு ராணுவத்தினர், பொதுமக்கள் பலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி ெசலுத்தினர்.
மேலும் செய்திகள்
புதிதாக முதியோர் உதவித்தொகை வழங்க ஒப்புதல் அமைச்சரின் போராட்டத்தால் 17 கோப்புகளுக்கு அனுமதி
தமிழகம் மற்றும் புதுவையில் ரூ.10 ேகாடி மோசடி பைனான்ஸ் நிறுவன உரிமையாளர், 6 பேர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு
அரசு செவிலியர் வீட்டில் 40 பவுன் நகை துணிகர திருட்டு
புதுவையில் புதிதாக 31 பேருக்கு தொற்று
புதுவையில் 23 பேருக்கு கொரோனா
திமுக தலைமையில் தான் கூட்டணி புதுச்சேரியின் 30 தொகுதியில் வெற்றி பெறாவிடில் தற்கொலை செய்து கொள்வேன்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்