போலி பத்திரம் தயாரித்த நில மோசடி ஆசாமி குறித்து தகவல் கொடுக்க போலீஸ் வேண்டுகோள்
11/12/2019 6:13:23 AM
புதுச்சேரி, நவ. 12: புதுவையில் போலி பத்திரம் தயாரித்த நில மோசடி ஆசாமி குறித்து தகவல் கொடுக்குமாறு லாஸ்பேட்டை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுவை, வினோபா நகரைச் சேர்ந்தவர் உமாசுதன் (40). லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான இவர் மீது ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை போலி பத்திரம் தயாரித்து விற்று மோசடி செய்ததாக லாஸ்பேட்டை போலீசில் சில மாதங்களுக்கு முன்பு வழக்குபதிவு செய்யப்பட்டது. போலி ஆவணம் தயாரித்தல், ேமாசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவான நிலையில் உமாசுதன் தலைமறைவானார். சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது வரை போலீஸ் பிடியில் சிக்காமல் உள்ள இந்த மோசடி நபரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனே லாஸ்பேட்டை காவல் நிலையத்தை 0413-2234097 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வழக்கில் துணை தாசில்தார் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
புதுவையில் 23 பேருக்கு கொரோனா
திமுக தலைமையில் தான் கூட்டணி புதுச்சேரியின் 30 தொகுதியில் வெற்றி பெறாவிடில் தற்கொலை செய்து கொள்வேன்
புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா
கலெக்டரின் உதவியாளர் உள்பட 7 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
கல்லூரி மாணவரிடம் ₹66 ஆயிரம் பணம் திருட்டு
புதுவையில் புதிதாக 16 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு 2 பேர் பலி
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!