காட்சி பொருளான குடிநீர் தொட்டி
11/12/2019 6:12:55 AM
தியாகதுருகம், நவ. 12: தியாகதுருகம் ஒன்றியத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் அந்தந்த ஊராட்சி கிராமங்களில் உள்ள ஊராட்சி செயலர்கள் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தீர்க்க முடியாத நிலை உள்ளது. தியாகதுருகம் ஒன்றியம் புக்குளம், உதயமாம்பட்டு, மாம்பட்டு போன்ற 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் மோட்டார் வசதிடன் கூடிய குடிநீர் தேக்க தொட்டி அந்தந்த ஊராட்சிகளில் அமைந்துள்ளது.இதனை கிராம மக்கள் குடிப்பதற்கும், அன்றாட தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று அது வெறும் காட்சி பொருளாக உள்ளது. கடந்த 6 மாத காலமாக அதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த மின் மோட்டார் பழுதடைந்து போனது. அதனை ஊராட்சி அதிகாரிகள் வந்து சரி செய்தனர். அது இரண்டு நாட்கள் கூட இயங்கவில்லை. இப்போது அதை சரி செய்து 1 வருடத்திற்கு மேலாக அது காட்சி பொருளாக உள்ளது. தற்போது, மழைக்காலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது. இதுவே கோடைக்காலம் என்றால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். ஆகையால் எங்களுக்கு இந்த மின் மோட்டாரை பழுது பார்த்து நீர் தேக்க தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தடுப்பணையை உடைத்து தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடல் மீட்பு
பைக்கில் கடத்திய 80 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பைக் விபத்தில் வாலிபர் பலி
மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ₹42 லட்சம்
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்
சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!