தேவாலய திறப்பு ஆராதனை விழா
11/12/2019 1:33:52 AM
திருவொற்றியூர்: மாதவரம் தபால் பெட்டி தெருவில் செயின்ட் செபாஸ்டின் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இந்த நிலையில் மிகவும் பழமையான இந்த தேவாலயத்தில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்தயொட்டி “அர்ச்சிப்பு” என்ற தேவாலய திறப்பு ஆராதனை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆலய வாசலில் இருந்து குருக்கள் மற்றும் அருட்பணியாளர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆலயத்தினுள் செல்ல பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பிரார்த்தனை செய்து அர்ச்சித்து, திருப்பலி நிறைவேற்றினார்.
பின்னர் சிறப்பு பிரார்த்தனையும், ஆராதனையும் நடைபெற்றது. இந்த விழாவில் பங்குத்தந்தை சைமன், இந்திய பிரான்சிஸ்கள் மறை மாநில தலைவர் பிரவீன் ஹென்றி டிசோசா, சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
போரூர் சுங்கச்சாவடி அடித்து உடைப்பு: ஆசாமிகளுக்கு வலை
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை பணியை 15 நாளில் முடிக்க உத்தரவிட கோரி வழக்கு: நெடுஞ்சாலை துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்