மயிலாப்பூரில் இறந்தவரின் புகைப்படத்தில் போட்டிருந்த 9 சவரன் திருட்டு: உறவுக்கார பெண் கைது
11/12/2019 1:33:25 AM
சென்னை: மயிலாப்பூர் விஎஸ்வி கோயில் தெருவை சேர்ந்தவர் பலராமன் (75). இவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் இறந்த மனைவியின் சடங்கு நிகழ்ச்சி கடந்த 22ம் ேததி நடந்தது. அப்போது புகைப்படத்தில் இறந்தவர் பயன்படுத்திய 9 சவரன் தாலி செயின் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. சடங்கு முடிந்து பார்த்தபோது 9 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பலராமன் சடங்கிற்கு வந்த உறவினர்களிடம் கேட்டார். ஆனால் யாரும் “நாங்கள் எடுக்கவில்லை” என்று கூறினர். ஆனால் ஒரு பெண் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த பலராமன், அவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், பலராமனின் உறவினரான அடையார் இந்திராநகரை சேர்ந்த மீனா (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சடங்கு நேரத்தில் 9 சவரன் தாலி செயினை கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தாலி செயினும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு தாம்பரம், டிஎன்எச்பி காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன் (65). கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைத்து எல்இடி டிவி, லேப்டாப், ஐபோன், ஒன்றரை சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம். ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. திருச்சி லிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதிகான் (49). இவர் கோபாலபுரத்தில் உள்ள நுகர் பொருள் வாணிப கழகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் தங்கி உள்ளார். கடந்த 8ம் தேதி பணி முடிந்து இரவு லாட்ஜிக்கு நடந்து சென்று கொண்டிருந்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் ஆதிகான் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மாயமாகினர். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி முகமது ரவூப் (21), ஐஸ்அவுஸ் இம்ரான் பாஷா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
பேருந்தில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்
கோயில் பூசாரி தற்கொலை
தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரால் பரபரப்பு
புளியந்தோப்பு சாஸ்திரி நகரில் தாழ்வாக தொங்கும் மின் வயர்களால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்
மாட்டு பொங்கலுக்கு கோயில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டுவதற்கு தடையை கண்டித்து போராட்டம்
திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனில் குப்பை கழிவுகள்: துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்