தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு
11/9/2019 6:01:10 AM
சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை - ெசங்கல்பட்டு இடையே 11ம் தேதி இரவு 8.01 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 11ம் தேதி இரவு 9.18 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம் - சங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே 11ம் தேதி இரவு 10.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே 11ம் தேதி இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 3.55, 4.35, 5.15, 5.50, 6.05, 6.43 மணிக்கும், இரவு 5.18, 8.01, 9.18 இயக்கப்படும் ரயில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 3.55, 4.35, 4.50, 6.40, 6.55, 8.40 மணிக்கும், இரவு 7.25, 10.15, 11.10 மணிக்கும் இயக்கப்படும் ரயில் 12, 15ம் தேதிகளில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து : பராமரிப்பு பணி காரணமாக, வரும் 16ம் தேதி மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் காச்சிகோடா- செங்கல்பட்டு ரயில், தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயும், 17ம் தேதி காலை 7 மணிக்கு மதுரை- சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு- சென்னை எழும்பூர் இடையேயும், 17ம் தேதி பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை எழும்பூர்- மதுரை வரை இயக்கப்படும் வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர்- செங்கல்பட்டு இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், 17ம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு- காச்சிகோடா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையேயும், 17ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் செங்கல்பட்டு- காக்கிநாடா சர்கார் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு- தாம்பரம் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் குற்றப்பின்னணி உள்ள 828 ரவுடிகளை போலீசார் கண்காணிப்பு: தேர்தல் விதி மீறியதாக 14 வழக்குகள் பதிவு
சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலை தாம்பரத்தில் நிறுத்த மறுப்பு: பயணிகள் அதிருப்தி
சுடுகாட்டை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை கண்டித்து மறியல்
சோப்பு கட்டிக்குள் மறைத்து கடத்திய ரூ.35.7 லட்சம் தங்கம் பறிமுதல்: ஆசாமி கைது
துணை ராணுவ அணிவகுப்பு
திமுக மாவட்ட செயலாளர் தாயார் காலமானார்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்