ராமானுஜம்புதூர் பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்துகள் வழங்கல்
11/8/2019 6:50:52 AM
வைகுண்டம், நவ.8:கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் ராமானுஜம்புதூர் பள்ளி மாணவ, மாணவியர்களிடத்தில் ‘மரம் வளர்ப்பதின் அவசியம்’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கத்தில் ‘விதைப்பந்துகள்’ வழங்கும் விழா நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜனரஞ்சனி தலைமை வகித்தார். தலைமையாசிரியை வசந்தி முன்னிலை வகித்தார். தோட்டக்கலைத்துறை அலுவலர் சுவேகா வரவேற்றார். விழாவில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜனரஞ்சி பள்ளியின் 500மாணவ, மாணவியர்களுக்கு விதைப்பந்துகளை வழங்கி பேசியதாவது, இன்றுள்ள வாழ்க்கைச் சூழலில் ‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்ற முறையில் மாணவ, மாணவியர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மரம் வளர்க்கவேண்டியது மிகவும் அவசியமாகும். நீங்கள் மரம் வளர்த்திட விதைப்பந்துகள் வழங்கப்படுகிறது. இதனை நீங்கள் வெளியே செல்லும் போது தரிசு நிலங்கள், வனப்பகுதிகள், காடுகள், மலையடிவாரங்கள் போன்ற இடங்களில் அப்படியே தூக்கி வீசிலாம்.
விதைப்பந்துகளின் உள்ளே உள்ள விதைகள் மழை பெய்யும் வரையிலும், பாதுகாப்பாக இருந்து கண்டிப்பாக முளைத்திடும். எனவே நீங்கள் ஓய்வு நேரத்தில் விதைப்பந்துகளை உருவாக்கி நல்ல இடம் பார்த்து வீசி மரம் வளர்ப்பதற்கு உறுதுணையாக இருங்கள் என்றார்.இதில், ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், தோட்டக்கலைத்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் பிரேம்குமார் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
போலி ஆவணம் தயாரித்து முதியவரிடம் ரூ.4.25 லட்சம் மோசடி
எவரெஸ்ட் பள்ளி சார்பில் கடையநல்லூரில் விழிப்புணர்வு பேரணி
பணகுடியில் பூத் கமிட்டி பணிகள் ஆய்வுக்கூட்டம் 3ம் முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்
தென்காசி வாகன பேரணியில் காங்கிரசார் திரளாக பங்கேற்பு பழனி நாடார் அறிக்கை
பாளையில் தம்ரோ பர்னிச்சர் புதிய ஷோரூம் திறப்பு விழா
பண்பொழி தைப்பூசத் திருவிழாவில் முருகர், சண்முகர்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்