வெற்றி நம் கையில் கையேடு வெளியீடு
11/8/2019 6:21:40 AM
கிருஷ்ணகிரி, நவ.8: ஐவிடிபி சார்பில் ₹2 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட தெலுங்கு மொழி மாணவர்களுக்கான வெற்றி நம் கையில் கையேடு வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி ஐவிடிபி தொண்டு நிறுவனம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், நம்பிக்கையோடு பொதுத் தேர்வை எதிர்கொள்ளவும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு, வெற்றி நம் கையில் எனும் வினா-விடை தொகுப்பு நூலை தயாரித்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தெலுங்கு வழியில் 11வது மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக, ₹2 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட வெற்றி நம் கையில் வினா-விடை கையேடு வெளியிடும் நிகழ்ச்சி, ஐவிடிபி தலைமை அலுவலகத்தில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் பிரபாகர் பங்கேற்று, வெற்றி நம் கையில் கையேட்டை வெளியிட்டு பேசினார்.
நிகழ்ச்சியில் ஐவிடிபி நிறுவனர் பேசுகையில், ‘இதுவரை தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு வழியில் வெற்றி நம் கையில் கையேடு ₹4.12 கோடி மதிப்பிலும், பல்வேறு கல்வி பணிகளுக்காக ₹25 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது,’ என்றார். நிகழ்ச்சியை ஓசூர் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் நாராயணன் தொகுத்து வழங்கினார். தெலுங்கு வழியில் இந்த புத்தகத்தை தயாரிக்க உதவிய 36 ஆசிரியர்களுக்கு தலா ₹1100 மதிப்பிலான பாஸ்ட் டிராக் பேக் என மொத்தம் ₹40 ஆயிரம் மதிப்பில் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
விற்பனை கருவியை வாபஸ் பெறக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம்
பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
குடியரசு தினவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
தீயணைப்பு துறை செயலி விழிப்புணர்வு
மாணவி கடத்தல்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்