விவசாயிகளுக்கு தூயபால் உற்பத்தி பயிற்சி
11/8/2019 5:54:35 AM
ஜெயங்கொண்டம், நவ. 8: ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் (அட்மா) தூயபால் உற்பத்தி குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி, த.வளவெட்டிக்குப்பம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சுப்பிரமணியன் தலைமை வகித்தார். த.வளவெட்டிக்குப்பம் கால்நடை மருத்துவர் இளையராஜா பங்கேற்று மாட்டு கொட்டகை அமைத்தல், பராமரித்தல், கறவை மாடுகள் மற்றும் இளங்கன்றுகள் பராமரிப்பு முறை குறித்து விளக்கி கூறினார். மேலும் நல்ல தரமான பால் உற்பத்தி செய்ய பசுக்களுக்கு அளிக்க வேண்டிய பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் மற்றும் ஊறுகாய்ப்புல் தயாரிப்பு முறை, கோமாரிநோய் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து எடுத்து கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.அட்மா திட்ட செயல்பாடுகளான பயிற்சி, கண்டுணர்வு சுற்றுலா, பண்ணைப்பள்ளி, செயல்விளக்கம் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி விளக்கம் அளித்தார். பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முருகன் மற்றும் சங்கீதபிரியா பங்கேற்றனர். பயிற்சியில் த.வளவெட்டிக்குப்பம், தத்தனூர் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பெரம்பலூரில் முதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவு பாிசோதனை
கலெக்டர் ஆய்வு கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
பெரம்பலூரில் பரிதாபம் பெண் தீக்குளித்து சாவு 2 குழந்தைகள் தப்பினர்
கருவில் வளரும் குழந்தை பாலினம் பரிசோதனை மேற்கொள்ளும் ஸ்கேன் மையம் மீது கடும் நடவடிக்கை அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை
பெரம்பலூரில் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கேட்டு ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்