குமரி அமமுகவுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம்
11/7/2019 6:25:50 AM
நாகர்கோவில், நவ.7 : குமரி கிழக்கு மாவட்ட அமமுகவுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா கூறினார். குமரி மாவட்ட அமமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சைமால், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள், அமமுகவில் இருந்து விலகி, சென்னையில் நேற்று முன் தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து தற்போது குமரி கிழக்கு மாவட்ட அமமுகவுக்கு கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் மாணிக்கராஜா தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவரும், குழு உறுப்பினருமான ஹிமாம் பாதுஷா தலைமை வகித்தார். கூட்டத்தில் மண்டல ெபாறுப்பாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான மாணிக்கராஜா பேசியதாவது :
6 மாதங்களுக்கு முன்பே, குமரி மாவட்ட அமமுக செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பச்சைமாலை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் முடிவெடுத்தார். நானும், இன்ஜினியர் லெட்சுமணனும் தான் டி.டி.வி. தினகரனிடம் பேசி, அதை தடுத்தோம். எந்த வித செயல்பாடும் இல்லாமல் பச்சைமால் இருந்தார். அவரது வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு கட்சியில் பொறுப்புகளை வழங்கினார். தற்போது அதிமுகவில் பச்சைமால் இணைந்துள்ளார். இனி அவருக்கு எதிர்காலம் இருக்காது. எதை எதிர்பார்த்து அவர் சென்றாேரா அது நடக்காது. பச்சைமாலுடன் ஏராளமானவர்கள் சென்றதாக கூறி வருகிறார்கள். ஆனால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் செல்ல வில்லை. முதல்வரிடம் 3 பஸ்களில் ஆட்களை அழைத்து வருவோம் என கூறி உள்ளனர். ஆனால் 33 பேர் தான் சென்றுள்ளனர். அமமுகவை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. டி.டி.வி. குமரி மாவட்ட அமமுகவுக்கு 5 பேர் ெகாண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கட்சியில் உழைக்க கூடியவர்களுக்கு உரிய அங்கீகாரம் உண்டு. இவ்வாறு அவர் பேசினார். குமரி மேற்கு மாவட்ட செயலாளர் டி. ஜெங்கின்ஸ், அமமுக பேரவை துணை செயலாளரும், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினருமான இன்ஜினியர் லெட்சுமணன், பொறுப்பு குழு உறுப்பினர்கள் வக்கீல் செல்லம், நவமணி, செந்தில் முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயிலில் தைத்திருவிழா ேதரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
வடக்கு, தெற்கு என அதிமுகவில் தோவாளை ஒன்றியம் 2 ஆக பிரிப்பு புதிய செயலாளர்கள் நியமனம்
பொக்லைன் இயந்திரத்தில் மோதி குழந்தை பலி பைக் ஓட்டிய தந்தை மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே கல்லூரியில் நுழைந்து தாக்குதல்
முஞ்சிறை ஒன்றிய பகுதியில் 5.13 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
மண்டைக்காடு கோயிலில் மாசிக்கொடை பந்தல் கால் நாட்டு விழா நாளை நடக்கிறது
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!