இளைஞர் திருவிழா போட்டி புதூர் கிங்ஸ் பள்ளி சாம்பியன்
11/7/2019 5:55:21 AM
வள்ளியூர், நவ. 7: வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் சார்பில், வள்ளியூர் யுனிவர்சல் பொறியியல் கல்லூரியில் இளைஞர் திருவிழா கலைப்போட்டிகள் நடந்தது. இதில் 12 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கலை, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. புதூர் கிங்ஸ் பள்ளி மாணவர்கள் பாட்டுப்போட்டியில் ஜூனியர் பிரிவில் முதலிடமும், ஓவியப் போட்டிகளில் ஜூனியர் பிரிவில் முதலிடமும், பரதநாட்டியம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடனத்தில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் முதலிடமும் பிடித்தனர். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை பள்ளி தலைவர் காலின்வேக்ஸடாப், தாளாளர் நவமணி, பள்ளி முதல்வர் பிரடெரிக் சாம் ஆகியோர் பாராட்டினர்.
மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை தாமிரபரணியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு
மதுரா கோட்ஸ் சார்பில் அம்பை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக திசையன்விளை அமுதா நியமனம்
9 மாதங்களுக்கு பிறகு களக்காடு தலையணை இன்று திறப்பு
வல்லம் மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
அம்பை சமத்துவ பொங்கல் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்