100 நாள் வேலை திட்டத்தில் வயதான தொழிலாளர்களுக்கு கூலி வழங்காதது ஏன்?
11/6/2019 5:36:48 AM
சேத்துப்பட்டு. நவ.6: சேத்துப்பட்டு அடுத்த கோனையூர் கிராமத்தில் 100 நாள் வேைல திட்டத்தில் பணியாற்றும் வயதான தொழிலாளர்களுக்கு கூலி வழங்காதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:கோனையூர் கிராமத்தில் 100 நாள் வேலை செய்து வரும் வயதான தொழிலாளர்களுக்கு கூலி தருவதில்லை. பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் விநாயகபுரம், கோனையூர், குடிசைக்கரை, இமாபுரம் கிராமங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த 3 மாதமாக நடந்த கூட்டங்களில் முறையிட்டும் இதுவரை நடவடிக்கையும் இல்லை.
பெரிய கொழப்பலூர் கிராமத்தில் ஊருக்கு நடுவே பள்ளிகள் மற்றும் கோயிலுக்கு அருகாமையில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதை மாற்றக்கோரி 36வது முறையாக புகார் செய்கிறனே். உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.
மேலும் செய்திகள்
மணமகன் வீட்டில் 5 சவரன், ₹25 ஆயிரம் திருட்டு ஆரணி அருகே துணிகரம் திருமண வரவேற்புக்கு சென்றபோது
மணப்பெண் வீட்டில் 14 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை ஆரணி அருகே துணிகரம்
அரசு குழந்தைகள் காப்பகங்களில் ஆற்றுப்படுத்துநர் பணியிடம் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் செய்யும் பொதுமக்கள் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் 236பேர் பலி
திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுப்பு அதிமுகவினரை கண்டித்து சாலை மறியல் ஆரணி அருகே பரபரப்பு
2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார் குடியரசு தின விழா கொண்டாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!