கரும்பு நிலுவைத்தொகையை வழங்காவிட்டால் மருந்து பாட்டிலுடன் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்போம்
11/6/2019 5:35:56 AM
திருவண்ணாமலை, நவ.6: தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு நிலுவை தொகை உடனடியாக வழங்காவிட்டால், மருந்து பாட்டிலுடன் கூட்டத்தில் பங்கேற்போம் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை பிடிஓ அலுவலகத்தில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் அமுலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்ய உள்ள 44 பொருட்களுக்கு தடைவிதித்து, இதனை கைவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவை தொகையினை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். கலெக்டர் 10 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் இதுவரை வழங்கவில்லை.
எனவே, மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு முன்பாக நிலுவை தொகையை வழங்காவிட்டால், விவசாயிகள் அனைவரும் மருந்து பாட்டில்களுடன் வந்து பங்கேற்போம். மேலும், அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பூக்கள் வரத்து அதிகம் உள்ளதால், மாவட்டத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கொரோனா தடுப்பூசி போடுவதால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை வட்டார மருத்துவ அலுவலர் அட்வைஸ்
தேர்தல் கட்டுப்பாட்டால் குறைதீர்வு கூட்டம் ரத்து வீட்டுமனையை மீட்டுத்தரக்கோரி குடும்பத்துடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆர்டிஓ தலைமையில் நடந்தது
இளம்பெண் தற்கொலை
திருவண்ணாமலையில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு
ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை சுகாதார இணை இயக்குனர் ஆய்வு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்