SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழையில் நனைந்த உலர் தீவனங்களை கால்நடைகளுக்கு கட்டாயம் தரக்கூடாது இணை இயக்குனர் அறிவுறுத்தல்

11/5/2019 6:43:25 AM

பெரம்பலூர்,நவ.5:மழையில் நனைந்த உலர் தீவனங்களை கால்நடைகளுக்கு கட்டாயம் தரக்கூடாது என கால்நடைத்துறை இணை இயக்குநர் மதன கோபால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:கால்நடைகளை சுற்றுப்புற தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு பராமரித்தல் மிக முக்கியம். அதிலும் மழை க்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம். மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு நச்சுயிரிகள், நுண்ணுயிரிகள் மற் றும் ஒட்டுண்ணிகளால் பாதிப்பு ஏற்படும். தீவனத்தில் பூஞ்சான் தொற்று ஏற் படுவதால்செரிமான குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. குடற்புழுக்களால் ரத்த சோகை ஏற்படலாம். தொழுவம் மற்றும் சுற்றுப் புறங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படலாம். சினை மாடுகள், கன்றுக்குட்டிகள், இளம் ஆட்டுக்குட்டிகள் மழைக் காலங்களில் அதிக பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்க மழையில் நனைய விடாமல் தொழுவத்தில் கட்ட வேண்டும்.

பண்ணையை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கக் கூடாது. சப்பை நோய், தொ ண்டை அடைப்பான் போன்ற தொற்றுநோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசி போட வேண்டும். குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். வைக்கோல், சோளத் தட்டு, காய்ந்த கடலைக் கொடி போன்றவற்றை மழையில் நனையாதவாறு சேமிக்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் நனைந்த உலர் தீவனங்களை கட்டாயம் கொடுக்க கூடாது. நல்ல சுத்தமான குடிதண்ணீரை தர வேண்டும்.ஊட்டச்சத்து குறைபாட்டினால் உற்பத்தித் திறன் குறைவை தடுக்க, தாது உப்பு கலவை மற்றும் தாது உப்பு கட்டிகளை தர வேண்டும். மழை பெய்யும் போது கால்நடைகளை திறந்த வெளியில் மற்றும் மரத்தில் கட்டி வைக்ககூடாது. தொழுவங்களில் மின்கசிவு ஏற்படாமல் பராமரிக்க வேண்டும். மின்சார கம்பங்களில் மாடுகளை கட்டக் கூடாது. எனவே மழைக்கா லங்களில் கால்நடைகளை நன்கு பராமரித்து நோய்களிலிருந்து பாதுகாக்க வே ண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்