மனநலம் பாதித்த முதியவர் மர்ம சாவு
10/25/2019 3:30:34 AM
வில்லியனூர், அக். 25: வில்லியனூர் அருகே உள்ள மேல் திருக்காஞ்சி சுப்ரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (58). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே செல்வதும், அவரை உறவினர்கள் தேடி சென்று மீண்டும் வீட்டிற்கு கொண்டு வருவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சண்முகம் எங்கே போனார் என்று யாருக்கும் தெரியவில்லை. பிறகு அவரது மகன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அவர் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றின் கரையோரம் நின்றுகொண்டிருந்ததாக சிலர் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் தேடிப் பார்த்தபோது சண்முகம் ஆற்றில் பிணமாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவரது மகன் மகேந்திரன் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சண்முகம் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்ட புதுச்சேரி செவிலியர் நெகிழ்ச்சி
டெல்லி கலவரத்துக்கு மத்திய ஆட்சியாளர்களே காரணம்
எம்ஐடி கல்லூரியில் எக்ஸலன்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா
பறவைகளை விற்கும் குறவர்கள் வனத்துறை தீவிர கண்காணிப்பு
மரத்தில் லாரி மோதி ஓட்டுநர் பலி
முருங்கப்பாக்கம் முதல் சிவாஜி சிலை வரை ₹300 கோடியில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க மத்திய அமைச்சர் ஒப்புதல்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்