தியேட்டர்களில் கூடுதல் கட்டணமா? புகார் அளிக்க போன் எண்கள் வெளியீடு
10/23/2019 6:09:18 AM
திருச்சி, அக்.23: திருச்சி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதை பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக கோட்ட வாரியாக சப்.கலெக்டர், ஆர்டிஓக்கள் தலைமையில் காவல்/வணிக வரித்துறை அலுவலர்கள் கொண்ட சிறப்பு குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி கோட்டத்தில் உள்ள தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தை 0431-2415734 என்ற போன் எண்ணிலும், ரங்கம் கோட்டத்துக்கு 0431-2690603 என்ற எண்ணிலும், லால்குடி கோட்டத்துக்கு 0431-2541500, முசிறி கோட்டத்துக்கு 04326-260335 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு
வீராணம் ஏரிக்கு செல்கிறது பெண்ணிடம் தங்க செயினை பறித்த வாலிபர்கள் 4 மணி நேரத்தில் கைது
தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
பொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம்
வீட்டுச்சுவர் இடிந்து முதியவர் காயம்
10,008 வடைமாலை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்