ஓசூரில் சாரல் மழை; வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
10/23/2019 6:04:12 AM
ஓசூர், அக்.23: ஓசூர் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக ஓசூர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. ஓசூர், ஜூஜூவாடி, பாகலூர், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாததால், வீடுகளுக்குள் முடங்கினர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் சிரமத்துடன் கல்லூரிக்கு சென்று வந்தனர். தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கோயில் கும்பாபிஷேக விழா
சைக்கிள் வழங்கும் விழா
ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்
கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பஞ்.,தலைவருக்கு மக்கள் பாராட்டு
சத்துணவு மையத்தில் ஐஎஸ்ஓ நிறுவன இயக்குநர் ஆய்வு
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்