மத்திகிரியில் டிஒய்எப்ஐ ஆர்ப்பாட்டம்
10/23/2019 6:03:57 AM
ஓசூர், அக்.23: ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் ஐந்து அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி டிஒய்எப்ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சியில் உள்ள மத்திகிரி 43வது வார்டில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி டிஒய்எப்ஐ சார்பில் மத்திகிரி பஸ் நிலையம் முன்புஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு டிஒய்எப்ஐ மத்திகிரி கிளை தலைவர் மல்லேஷ் தலைமை வகித்தார். கிளை செயலாளர் பூபதி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட செயலாளர் சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பழைய மத்திகிரி பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். பழைய மத்திகிரி 43வது வார்டில் மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் நாகேஷ் பாபு, ஒன்றிய பொருளாளர் ஆங்கிலன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு 62 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்தனர்
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு
மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் காய்கறி விதை தொகுப்பு
ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்
ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
பர்கூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!