உலக சிக்கன தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் கலை போட்டி
10/23/2019 5:45:53 AM
ஈரோடு, அக். 23: ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று உலக சிக்கன தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளிடம் சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்க்கும் விதமாக மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில், கல்வி மாவட்டம் வாரியாக கடந்த 18ம் தேதி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, நடனம், நாடக போட்டியில் தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேற்று மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, நடனம், நாடக போட்டி நடந்தது.
இந் நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி தலைமையாசிரியை சுகந்தி தலைமை தாங்கினார். இப் போட்டி 6-8ம் வகுப்பு, 9-10ம் வகுப்பு, 11-12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மூன்று பிரிவாக நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு
ஈரோட்டில் நாளை மின் தடை
டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
முதலமைச்சர் ஆவோம் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்
ஈரோடு ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் செயின், வளையல் திருவிழா
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எதிர்க்கட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்