நாலாட்டின்புதூர் அருகே மின்கம்பியை துண்டித்த இருவருக்கு ஓராண்டு சிறை
10/23/2019 12:19:07 AM
தூத்துக்குடி, அக். 23: நாலாட்டின்புதூர் அருகே மின் கம்பியை துண்டித்த இருவருக்கு தூத்துக்குடி கோர்ட் ஓராண்டு சிறை விதித்தது. தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரம்பட்டியைச் சேர்ந்த மாரிகாளை மனைவி கோமதி (50). இவரது வீட்டை ஓட்டி சென்ற பக்கத்து வீட்டின் மின்கம்பியை கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி கோமதியும், வீட்டுக்கு வந்திருந்த உறவினரான செட்டிக்குறிச்சியை சேர்ந்த நல்லுசாமி மகன் காளிராஜ் (27) என்பவரும் சேர்ந்து துண்டித்தனர்.
இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரரான சுப்பையா நாலாட்டின்புதூர் மின்வாரியத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் உதவிப் பொறியாளர் லட்சுமி பிரியா நாலாட்டின் புதூர் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் விஸ்வநாத், குற்றம்சாட்டப்பட்ட காளிராஜ், கோமதி ஆகிய இருவருக்கும் தலா ஓராண்டு சிறை, ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆண்ட்ரூமணி ஆஜராகி வாதாடினார்.
மேலும் செய்திகள்
திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.31ல் 1221 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்
தூத்துக்குடியில் அதிநவீன வசதிகளுடன் தனராஜ் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
திருச்செந்தூரில் வேலை வாய்ப்பு முகாம்
ஏரல் தேவி நட்டார் அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி டிராக்டர் ஊர்வலம் நடத்தினால் நடவடிக்கை எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்