தீபாவளிக்கு இனிப்பு செய்திகள் தரும் அஸ்வின்ஸ்
10/18/2019 2:49:54 AM
திருச்சி, அக். 18: தீபாவளி என்றாலே இனிப்புதான் நம் நினைவுக்கும் வரும். இனிப்பு மற்றும் கார பலகாரம் இல்லாத தீபாவளியை எப்படி நம்மால் நினைத்துப் பாக்க முடியாதோ அதுபோல தான் இனிப்பு என்றதும் அஸ்வின்ஸ் நிறுவனமும், நம் நினைவிற்கு வருவதை நாம் தவிர்க்க முடியாது. அதனால் தீபாவளிக்காக அஸ்வின்ஸ் தலைவர் கே.ஆர்.வி.கணேசனை சந்தித்தோம்.இன் முகத்துடன் இருகரம் கூப்பி வரவேற்று தீபாவளி வாழ்த்து கூறிவிட்டு தீபாவளி பற்றி பேசினார்.தீபாவளிப் பண்டிகை நம் தீய மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஒழித்து நல்ல மற்றும் நேர்மறை எண்ணங்களை தூண்ட கொண்டாடப்படுகிறது. இதன் பாரம்பரியமாக அதிகாலை எண்ணெய் தேய்ததுக் குளித்து நம் உடல் பிரச்னைகளைக் களைந்து கடவுளை கும்பிட்டு புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து இனிப்பு உண்டு கொண்டாடுகிறோம்.இனிப்புகளை நாம் மட்டும் உண்ணாமல் நமது உறவினர்களுக்கும் நட்புகளுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் பகிர்ந்து நம் நல்லுறவு மற்றும் வாழ்த்துக்களை பகிர்வது மேலான பண்பாடு.
அத்தகைய மேலான பண்பாடான இனிப்புகளை நாங்கள் அஸ்வின்ஸ் நிறுவனத்தில் பாரம்பரிய முறையில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.நமது பாரம்பரிய பலகாரங்களான அதிரசம், தட்டை, மிக்சர், தேன்குழல் முறுக்கு, அச்சு முறுக்கு, கைமுறுக்கு, இனிப்புசீடை, சோமாசி, நெய்உருண்டை, பொறிவிளங்கா உருண்டை, பாதாம் அல்வா, குளோப்ஜாமூன், தீபாவளி - லேகியம் போன்றவை அஸ்வின்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிகம் விரும்பப்படும் தயாரிப்புகளாகும்.தீபாவளிக்காக பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு பலகாரம் வழங்க எங்களிடம் ஆர்டர் செய்துள்ளனர். அதோடல்லாமல் எங்கள் தினசரி வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் விஐபி கிப்ட் பாக்ஸ் ரூ.325, 625, ஸ்பெஷல் விஐபி கிப்ட் பாக்ஸ் ரூ.500, கிப்ட் பேக் சிறியது ரூ.350 மற்றும் கிப்ட் பேக் பெரியது ரூ.700 என பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளை தயார் செய்து விற்பனை செய்கிறோம். தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அஸ்வின்ஸ் பலகாரங்கள் தேவைப்படுவோர் 73730 41434 என்ற எங்களது வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொட்பு கொண்டு விவரங்கள் அறிந்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.ஒவ்வொரு தீபாவளியும் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். இந்த தீபாவளி அனைவருக்கும் சிறப்பானதாக அமைய எங்களது வாழ்த்துக்கள் என அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் கே.ஆர்.வி.கணேசன் இன்முகத்துடன் கூறி இனிப்பான அதிரசத்தை நமக்கு சுவைக்க தந்தார்.
மேலும் செய்திகள்
திமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை
11 மாத குழந்தையின் துண்டான விரல் மீண்டும் கிடைத்தது டெல்டா மாவட்டங்களில் வெற்றிகரமான முதல் அதி நுண் அறுவை சிகிச்சை
திருச்சி தொழிலதிபர் வீரசக்தி மக்கள் நீதிமய்யத்தில் இணைந்தார் திருச்சியில் குறைவான பேருந்துகளே இயக்கம்
காத்திருப்பு போராட்டத்தில் பரபரப்பு அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகி மயங்கி விழுந்தார் விஷப்பூச்சி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி
மாற்றுத்திறனாளிகள் 35 பேர் கைது
3வது நாளாக சாலைமறியல்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!