ரயிலில் பட்டாசு எடுத்து செல்லாதீங்க... விழிப்புணர்வு ஏற்படுத்த களமிறங்கிய ஆர்பிஎப்
10/18/2019 2:49:46 AM
திருச்சி, அக்.18: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ரயில், பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பொதுமக்கள் பட்டாசு எடுத்துச் செல்வது வழக்கமாக நடக்கிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பட்டாசுகளால் எடுத்துச் செல்பவருக்கு மட்டுமல்ல உடன் பயணிக்கும் சக பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீஸ் சார்பில், ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் நேற்று நடந்தது. ஆர்பிஎப் கமிஷனர் மொய்தீன் உத்தரவின்பேரில், கோட்ட ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில், காரைக்கால்-எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் எஸ்ஐகள் மோகன், ராஜ்குமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரயில் பயணத்தின்போது பட்டாசுகள், வெடி பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது. படிகட்டில் பயணம் செய்யக்கூடாது. ஓடும் ரயிலில் ஏறக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து ரயிலில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினர்.
மேலும் செய்திகள்
ஆதனூர் துணை சுகாதார நிலையம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?
திருத்துறைப்பூண்டி தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்
மன்னார்குடி அருகே ஆடு மேய்க்க சென்றவர் வாய்க்காலில் சடலமாக மீட்பு சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்+
கந்தன்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
என்எஸ்எஸ் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி திருவாரூரில் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!