SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ேதனியில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

10/18/2019 1:26:50 AM

தேனி, அக். 18: தேனி பழைய, புதிய பஸ்ஸ்டாண்ட்களில் நகராட்சி நிர்வாகம் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.தேனியில் பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ்ஸ்டாண்ட்களில் நகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள், பயணிகளின் நடைபாதைகளையும் ஆக்கிரமித்து கடை வைத்துக் கொண்டனர். இதுகுறித்து புகார்கள் நகராட்சிக்கு வந்தது. இதனை தொடர்ந்து தேனி டிஎஸ்பி முத்துராஜ் தலைமையில் போலீசாரும், நகராட்சி கமிஷனர் ராஜாராம், சுகாதார ஆய்வாளர் அறிவுச்செல்வம் உட்பட அதிகாரிகள் குழுவும் சென்று, பழைய பஸ்ஸ்டாண்ட், புதிய பஸ்ஸ்டாண்ட்களில் பயணிகளின் நடைபாதைகளில் அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். கடைகள் ஏலம் எடுத்த நபர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே கடைகள் வைக்க வேண்டும். மீறினால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 300kg11

    பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

  • monkey_thaayklannn1

    குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

  • eelephanttt11

    35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

  • muskes_ambani11

    27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

  • delhi_farmnmmmeee

    திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்