காங். வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ஏர்வாடியில் எஸ்டிபிஐ செயல்வீரர்கள் கூட்டம்
10/18/2019 12:22:53 AM
நெல்லை, அக். 18: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சியின் நாங்குநேரி தொகுதி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் ஏர்வாடியில் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி நாங்குநேரி சட்டமன்ற தொகுதி தலைவர் இம்ரான் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முல்லை மஜீத் வரவேற்றார். மாவட்ட தலைவர் எஸ்எஸ்ஏ கனி துவக்கி வைத்துப் பேசினார். மாநில செயலாளர் அஹமது நவவி கலந்து கொண்டு ரூபி மனோகரன் வெற்றிக்கான செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய சிறுபான்மை பிரிவு ஆலோசகர் அமீர்கான், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா, நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சித்திக், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரீமா பைசல், எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் களந்தை மீராசா உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட தலைவர் ஜன்னத் ஆலிமா, மருத்துவ சேவை அணி தலைவர் பேட்டை ஜெயலாணி, செயலாளர் பர்கிட் சேக், எஸ்டிடியூ மாவட்ட செயலாளர் பசீர்லால், செயற்குழு உறுப்பினர்கள் பாளை ஜிந்தா, ஏர்வாடி சேக், மகளிர் அணி மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா, நெல்லை தொகுதி தலைவர் காசிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செயலாளர் பர்கிட் அலாவுதீன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
போலி ஆவணம் தயாரித்து முதியவரிடம் ரூ.4.25 லட்சம் மோசடி
எவரெஸ்ட் பள்ளி சார்பில் கடையநல்லூரில் விழிப்புணர்வு பேரணி
பணகுடியில் பூத் கமிட்டி பணிகள் ஆய்வுக்கூட்டம் 3ம் முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்
தென்காசி வாகன பேரணியில் காங்கிரசார் திரளாக பங்கேற்பு பழனி நாடார் அறிக்கை
பாளையில் தம்ரோ பர்னிச்சர் புதிய ஷோரூம் திறப்பு விழா
பண்பொழி தைப்பூசத் திருவிழாவில் முருகர், சண்முகர்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்