சீர்காழி அருகே தென்னலக்குடியில் மதுபானம் கடத்தி வந்த கார் கவிழ்ந்தது
10/18/2019 12:13:34 AM
சீர்காழி, அக்.18:சீர்காழி அருகே தென்னலக்குடியில் மதுபானம் கடத்தி வந்த கார் கவிழ்ந்தது. சீர்காழி அருகே தென்னலக்குடி மெயின் ரோட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் டாஸ்மார்க் கடை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து டாஸ்மார்க் கடை எதிரே சாலையோரம் உள்ள வயலில் தலைகீழாக கவிழ்ந்தது. அப்போது டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்த மது பிரியர்கள் ஓடிப்போய் தலைகீழாக கவிழ்ந்த காரை பார்த்தபோது, அதில் 48 அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சீர்காழி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடத்திவரப்பட்ட மதுபான பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த காரைக்கால் திருநள்ளார் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பெரம்பலூரில் முதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவு பாிசோதனை
கலெக்டர் ஆய்வு கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்
பெரம்பலூரில் பரிதாபம் பெண் தீக்குளித்து சாவு 2 குழந்தைகள் தப்பினர்
கருவில் வளரும் குழந்தை பாலினம் பரிசோதனை மேற்கொள்ளும் ஸ்கேன் மையம் மீது கடும் நடவடிக்கை அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை
பெரம்பலூரில் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு கேட்டு ஆர்ப்பாட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்