நுகர்வோர் குறைதீர் நீதி மன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி, உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்ைக
10/17/2019 6:23:51 AM
திருவாரூர்,அக். 17: மாநிலம் முழுவதும் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி மற்றும் உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என தமிழக அரசுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் தலைவர் அண்ணாதுரை தலைமையிலும் பொதுச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், நுகர்வோருக்கு பலன் தரும் நல்ல அம்சங்கள் கொண்ட புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியதற்கு வரவேற்பு தெரிவிப்பதுடன், 300 வழக்குகளுக்கும் குறைவாக செயல்படும் நீதிமன்றங்களை அருகாமை மாவட்ட நீதிமன்றத்துடன் இணைக்கும் முடிவினை கைவிட வேண்டும், அரசு சார்பில் தடை செய்யப்பட்டுள்ள 14 வகையான பாலிதீன் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்படாமல் அனைத்து இடங்களிலும் புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வீட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அபராதம் விதிக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ள சம்பவம் பல்வேறு வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் கடைகளில் விற்பனை செய்யப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்வது, மாநிலம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் சேமிப்பு உருவாக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்வது, திருவாரூரில் புதிய பேரூந்து நிலையம் செல்வதற்கு நாகை மற்றும் மயிலாடுதுறை வழிதடத்தில் பேரூந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தஞ்சை மற்றும் மன்னார்குடி மார்க்க வழிதடங்களில் பேரூந்து கட்டணம் குறைக்கப்படாமல் பழைய முறையிலேயே வசூல் செய்யப்படுவது கண்டனத்துகுரியது என்பதுடன் இதற்கான கட்டண தொகையினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகளில் முத்திரையிடப்படாத தராசுகள் புழக்கத்தில் இருந்து வருவதால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் தெருவிளக்குகள் முழுமையாக எரிவதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையில் காலியாக உள்ள கேட் கீப்பர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் செயல்படும் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களில் நீதிபதி மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் பல்வேறு மாவட்டங்களில் பல மாதங்களாக காலியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நுகர்வோர்கள் தாக்கல் செய்யும் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி மற்றும் உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கேட்டுக் கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
திருத்துறைப்பூண்டி பூசலாங்குடி சிவன் கோயில் குளத்தில் ஆகாயதாமரை அகற்றம்
பெண் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
நீடாமங்கலம் அருகே அஞ்சல் துறையினரின் செல்வமகள் சேமிப்பு திட்டம் துவக்கி வைப்பு
திமுக ஆட்சியில் நியமனம், அதிமுக ஆட்சியில் நீக்கம் மக்கள் நலப்பணியாளர் வேலை கானல் நீரானது
பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனுமில்லை குடியரசு தின சிறப்பு கூட்டம்
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்