காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
10/17/2019 12:04:50 AM
காஞ்சிபுரம், அக்.17: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கிய சாரல் மழை நேற்று மதியம் வரை தொடர்ந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 45.4 மிமீ மழை பதிவானது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தாலும் கடந்த சில நாட்களாக அனல் காற்று அதிகமாக இருந்தது. இதனால் வெளியே செல்ல பொதுமக்கள் அச்சப்பட்டனர். பகலில் வெயிலின் தாக்கத்தாலும் இரவில் புழுக்கத்தாலும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் விட்டுவிட்டு மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவில் தொடங்கிய சாரல்மழை நேற்று மதியம் வரை நீடித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோன்று வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு, திருப்போரூர், கூடுவாஞ்சேரி உள்பட பல பகுதிகளிலும் மழை பெய்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் மி.மீட்டரில்
மேலும் செய்திகள்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி
2 வீடுகளை உடைத்து 32 சவரன் கொள்ளை
கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
தூக்கில் தலை; தரையில் உடல்: முந்திரி காட்டில் வாலிபர் சடலம்
திருப்போரூர் கந்தசுவாமி கோயில்: திருக்கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் வீதியுலா: பிரமோற்சவ விழா நிறைவு
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்