பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
10/16/2019 5:43:34 AM
ஈரோடு, அக்.16: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பவானி கோட்ட தலைவர் குஞ்சிரெட்டி தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ராமசாமி, உதவி மாநில தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பயிற்சி காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு பதவி உயர்வுகளை முன் தேதியிட்டு வழங்க வேண்டும். போஸ்ட்மேன் 1-01-1996ம் ஆண்டு முதல் உயர் ஊதிய விகித்தத்தில் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
ஜூன் மாதம் பணி நிறைவு செய்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கோட்ட பொருளாளர் பழனிவேல், உதவி செயலாளர் பால் மோகன்ராஜ், பவானி செயலாளர் பச்சையப்பன் மற்றும் பிஎஸ்என்எல் மற்றும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
கடந்த 3 மாதங்களில் குழந்தைகளுக்கு எதிராக 1,600 வழக்குகள் பதிவு
பல்வேறு வகையில் பிரசாரம் செய்தாலும் சட்டமன்ற உறுப்பினராக கூட கமல்ஹாசன் ஆக முடியாது
இடத்தை சமன் செய்ய வலியுறுத்தி 2வது நாளாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
பெருந்துறை தொகுதியில் ரூ.2.90 கோடியில் திட்டப்பணிகள்
ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது